கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து
இணையதளங்களில் விற்பனை செய்து கொண்டிருந்த கும்பலை சேர்ந்த 28 பேர்
ஸ்பெயினில் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் உள்ள டொரண்டோவை தலைநகராக கொண்டு செயல்பட்டு வந்த இந்த பயங்கர
கும்பலை பிடிப்பதற்காக இண்டெர்போலின் ஸ்பெஷல் டீம் கடந்த ஏப்ரல் மாதம்
முதல் தீவிரமாக வேலை பார்த்து வந்தது. இந்த கும்பலை இன்று காலை தகுந்த
ஆதாரங்களுடன் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தது.
மைனர் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பிரபல இணையதளங்களில் விற்று
கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த இந்த கும்பல் கூண்டோடு
மாட்டியுள்ளதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவர்களிடமிருந்து
உக்ரைன்,ருமேனியா, மற்றும் ஜெர்மனி நாடுகளை சேர்ந்த சிறுமிகள்
மீட்கப்பட்டனர்.
இவர்கள் தங்கள் வியாபாரத்தை 94 நாடுகளில் வைத்துள்ளனர். இவர்களின்
ஆண்டு வருமானம் $1.6 மில்லியன் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 28 பேர்களிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவலை
அடுத்து ஸ்பெயினில் உள்ள இவர்களின் கூட்டாளிகள் 10 பேர் மேலும் கைது
செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
canadamirror
0 Responses to குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் விற்பனை செய்த கும்பல் அதிரடியாகக் கைது