Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று தமிழக முதல்வர் தலைமையில், தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் பற்றியும், நாளை உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கும் தீர்ப்பு பற்றியும் விவாதித்து நல்ல முடிவு எடுக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், கூட்டத்தில் முக்கியமாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பரிதாப நிலைக்கு எப்படியாவது தீர்வு காணவேண்டும் என்கிற எண்ணத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின், விவசாய வளர்ச்சிக்காக பல்வேறு நலத் திட்டங்களையும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்க உள்ளார் என்றே அரசு தரப்பில் தெரிவிக்கப் படும் தகவல்களா இருக்கின்றன.

0 Responses to இன்று தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!: காவிரி பிரச்சனை?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com