Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத்தில் மோடியின் சாதனைகள் தெரியவேண்டுமானால், கண்களை திறந்து வைத்துக் கொண்டு சோனியா காந்தி பார்க்கவேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

குஜராத்தில் வரும் 13 மற்றும் 17 ஆகிய திகதிகளில் சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில் குஜராத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. அங்கு சூரத் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தில் இதுவரை மோடி தலைமையில் மிக மோசமான ஆட்சி நடந்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், மோடியின் ஆட்சியில் குஜராத் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்றும் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடைக்கவில்லை என்றும் குறை கூறியிருப்பதோடு, குஜராத் சாலைகள் மிக மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு குஜராத் லக்னோ நகரில் பதில் அளித்து பேசியுள்ள பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் மத்திய முக்கிய எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், குஜராத்தில் மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி நிலவ, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மக்களின் வளர்ச்சிக்காக என்று ஒன்றுமே செய்யாத பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சரியான பாடம் புகட்ட, மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

அடுத்து அகமதாபாத் நகரில் பேசிய அருண்ஜெட்லி, சோனியா காந்தி கண்களை மூடிக் கொண்டு குஜராத் நகரை சுற்றிவந்தால் குஜராத்தின் வளர்ச்சி கண்களுக்குத் தெரியாது என்றும், கண்களை விழித்துக் கொண்டு குஜராத்தை சுற்றிவந்தால் குஜராத் மாநிலத்தின் அபரிமிதமான வளர்ச்சி கண்களுக்குத் தெரியும் என்றும் பேசியுள்ளார். மேலும், காங்கிரஸ் காரர்களே ஒத்துக் கொண்ட உண்மை குஜராத்தில் மோடியின் தலைமையிலான ஆட்சியில் குஜராத் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது என்பது என்றும் பேசியுள்ளார்.

0 Responses to மோடியின் சாதனைகள் தெரியவேண்டுமானால் சோனியா கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு பார்க்கவேண்டும் : அருண்ஜெட்லி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com