Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைமுக சமிக்ஞை கொடுத்திருப்பதாக வெளிவந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பார்த்தீபன் உள்ளிட்டோரை நேரில் சென்று சந்தித்து திரும்பிய விஜயகாந்த் பின்னர் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறுகையில் : தமிழக முதல்வர் அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்களை யாரும் விமர்சிக்க கூடாதா? இவர்கள் ஒழுங்காக ஆட்சி நடத்துகிறார்களா? ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்போம். இதற்கெல்லாம் அச்சப்பட மாட்டேன்.

அவதூறு வழக்குகளை என் மீது, கலைஞர் மீது, ஸ்டாலின் மீது, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது போடுகின்றார்கள்.

வைரவிழாவுக்கு ஏன் சென்றீர்கள் என நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டார். வைரவிழா ஜெயலலிதாவுக்கு நடைபெறவில்லை. சட்டசபைக்கு தான் நடந்தது. அதனால் தான் சென்றேன் என்றார்.

அப்போது ஒரு நிருபர் நீங்கள் திமுக கூட்டணிக்கு செல்வீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த் 'இருக்கலாம், அன்று பார்த்துக்கொள்ளலாம். இப்போது நாடு கெட்டு குட்டிச்சுவராகி விட்டது. தேர்தல் எப்போதோ வரும். இன்றைக்கே எல்லாவற்றையும் கூறிவிட முடியாது.' என்றார். மக்களவை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க இருக்கிறது என்பதையே இப்படி விஜயகாந்த் மறைமுகமாக சுட்டியிருப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

0 Responses to திமுகவுடன் கூட்டணியா? : 'இருக்கலாம்' என்கிறார் விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com