மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொது அடக்குமுறையை
கட்டவிழ்த்து விட்டு, அரசாங்கம் நாசிவாதிகள் போல் செயற்பட்டு வருவதாக சம
உரிமைகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவிந்திர முதலிகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார மாயைக்கு மயங்காது அதற்கு எதிராக போராடுவோரை காணாமல் போக செய்யும் அரசாங்கம், கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சாதாரண சட்டத்தை செயற்படுத்தவில்லை.
போருக்கு பின்னர், வடக்கு கிழக்கு மக்களை பதிவுசெய்யும் போது, குடும்பங்களை புகைப்படம் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் மீண்டும் அரசாங்கம் அவ்வாறே தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.
மட்டக்களப்பில் மீண்டும் குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்திற்கு அரச இலச்சினையுடன் இலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. தென்பகுதிக்கு கிடைக்கும் அடிப்படை உரிமைக் கூட இதன் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.
வடபகுதியை சேர்ந்த நிமலரூபன், தில்ருக்ஷன் ஆகிய தமிழ் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். லலித், குகன் பொன்ற அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போக செய்யப்பட்டது போல, தெற்கிலும் சிறைக்கைதிகளை கொலை செய்த அரசாங்கத்தின் இராணுவ ஆட்சியானது நிச்சயம் எதிர்காலத்தில் தெற்கிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த அழுத்தமான நிலைமையை எதிர்கொள்ள பொது எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் தேவையில்லை. இனங்களுக்கு இடையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முனைப்புகளை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள், மாணவர்கள், மீனவர்கள்,விவசாயிகள், இளம் சக்திகளுடன் கூடிய அரசியல் செயற்பாட்டினால் மாத்திரமே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என ரவிந்திர முதலிகே தெரிவித்துள்ளார்.
நன்றி : GTN

0 Responses to வடக்கை போன்று தெற்கிலும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம்: ரவீந்திர முதலிகே