Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீபத்தில் தென்கொரிய போப் இசை நட்சத்திரமான ப்சை (Psy) பாடி நடித்த போப் பாடலான 'கங்னம் ஸ்டைல்' மிகவும் பிரசித்தமாகி YouTube அதிகம் பார்க்கப் பட்ட வீடியோவாக சாதனை படைத்திருந்தது.

இதைவிட இன்னமும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களால் வெறித்தனமாகக் கேட்கப்பட்டும் ஆடப்பட்டும் வருகின்றது. இந்த வெறித்தனத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் சமீபத்தில் ப்சையின் நடவடிக்கை ஒன்று அமைந்துள்ளது எனலாம்.

அதாவது தென்கொரிய rock band N.E.X.T மற்றும் Psy ஆகிய இரு Rap இசைக் கலைஞர்களும் சேர்ந்து 'Dear America' எனும் பாடலை எழுதி இன்னும் ஒரு நபருடன் சேர்ந்து 2004 ஆம் ஆண்டு மேடையில் பாடியிருந்தனர். இப்பாடல் வரிகள் சமீபத்தில் CNN இன் ireport வெளியான போது அமெரிக்காவின் இறையாண்மையைப் பாதிக்கும் வரிகள் இதில் இருப்பதாக வாசகர்களால் பல கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அதாவது இவ்வரிகளில், ஈராக்கில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட தென்கொரிய பிணைக் கைதி பற்றியும் ஈராக்கில் பலியான அமெரிக்கப் படைகள் குறித்தும் அமெரிக்கர்களை ஆத்திரமூட்டும் விதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வரிகள் காரணமாக நான் அறிந்தோ அறியாமலோ உங்களைக் கோபமுறச் செய்திருந்தால் அதற்கு என் தாழ்மையான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கின்றேன் என் Psy வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளார். மேலும் தனது நாட்டிலும் (தென்கொரியாவில்), உலகம் முழுதும் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்க தனது இன்னுயிரை அர்ப்பணித்த அமெரிக்க வீரர் வீராங்கணைகளை தான் மிகவும் மரியாதையுடன் நினைவு கூர்வதாகவும் Psy தெரிவித்துள்ளார்.

0 Responses to அமெரிக்காவுக்கு எதிரான பாடல் வரிகளுக்கு மன்னிப்புக் கோரிய 'கங்னாம் ஸ்டைல்' Psy

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com