Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டணியின்  தலைவர் திரு சம்மந்தன் அவர்கள், ஈழப்போராட்டத்தை சர்வதேச மயப்படுத்திய தமிழ் மக்களின் விடுதலை இயக்கத்தை பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அதனால் தான் அழிக்கப்பட்டார்கள் என்றும் அத்தோடு, அவர்கள் மனிதவுரிமையை மதிக்காதவர்கள் என்றும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நச்சுக் கருத்தை தெரிவித்துள்ளார்.

திரு.சம்பந்தனின் தான்தோன்றித்தனமான இந்த நச்சுக் கருத்தானது அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தி 35 வருடங்களாக போராடி மண்ணுக்காக மரணித்த 40ஆயிரத்துக்கும் மேலான மாவீரர்களின் தியாகத்தையும் தேசவிடுதலைப் போரில் தங்கள் விலைமதிக்க முடியாத உயிர்களைத் துறந்த இலச்சக்கணக்கான மக்களினதும் தியாகங்களை கொச்சைப்படுத்தும் அதேவேளை, இன்று சிங்கள அரசுக்கு எதிராக மாறிவரும் சர்வதேச  அழுத்தங்களை தடுத்து நிறுத்துவதோடு, சிங்கள அரசின் இனவழிப்பை நியாயப்படுத்துவதாகவே பார்க்கமுடிகிறது.

தமிழ் மக்களை காயப்படுத்துகின்ற  திரு.சம்மந்தன் அவர்களின் இவ்வாறான கருத்துகளுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையாகிய நாம் எமது பலத்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!

இது தொடர்பாக யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏனைய பெயர் குறிப்பிட முடியாத பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு பேசுகையில் அவர் 'தமக்கு திரு.சம்பந்தர் அவர்கள் கூறியிருப்பது பெரிதாக  ஆச்சரியத்தை தரவில்லை, ஏனென்றால் கடந்த காலங்களில் திரு.சம்பந்தர் அவர்களின் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் பல தடவை தளம்பல் நிலையையே கொண்டதாக காணக்கூடியதாக இருக்கின்றது என்றும், அத்தோடு திரு.சம்பந்தர் அவர்களின் கருத்தை தாம் உடனடியாகவே நிராகரிக்கின்றோம்  என்றும் மேலும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியத்தில் உறுதியோடு செயல்படும் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு திரு.சம்பந்தர் அவர்களின் திட்டமிட்ட பின்னணியில் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சில இடையூறுகள் இருப்பதையும்  தாம் அறியக் கூடியதாக இருக்கின்றது' என்பதை தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று தாம் கூறவில்லை என்ற சப்பந்தனின் கருத்தானது, வடக்கு மற்றும் கிழக்கில் - தமிழர் பாரம்பரிய பூமியில் - சிங்கள இனவெறி அரசின் இனவழிப்பை, சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொண்டுவரும் பாலியல் வன்முறைகள், நிலப்பறிபு, கலாச்சாரச் சீர்கேடு அத்தோடு இன்றைய நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து நடைபெற்றுவரும் கைதுகள் போன்றவற்றை அங்கீகரிப்பதாகவே  அமைகின்றது.

மேலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இராணுவ ரீதியான  போர் முடிவுற்ற நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் பல மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கும் சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தில் தீவிரமாக தமிழர் மண்ணை அபகரிப்பதையும் படைப் பிரசன்னத்தையும் திரு.சம்பந்தர் மனதார ஏற்றுக்கொள்கின்றார் என்பதை  அவர் ஆற்றிய உரை கோடிட்டு காட்டுகின்றது.

இன்றைய நாட்களில் சிங்கள பயங்கரவாத இராணுவத்தின் மத்தியிலும் மண்ணுக்காக மரணித்த மாவீரர்களின் தியாகத்தை வணங்கும் வகையில் கார்த்திகை 27 ஆம் நாள் அன்று தீபம் ஏற்றி வணங்கிய பல்கலைக் கழக மாணவர்களின் மீது சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கும் கைதுகளுக்கும் முகம் கொடுத்து தன்மான தமிழினத்தின் வீரத்தை பறைசாற்றி நிற்கும் மாணவர்களின் துணிவை மழுங்கடிக்கும் முகமாக, மாணவர்கள் வெறுமனே கார்த்திகை விளக்கீட்டு தீபம் தான் ஏற்றினார்கள் என்று கூறிய இதே சம்பந்தர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டுவருவதை வலுப்படுத்திக் காட்டுகிறது.

அத்தோடு, கடந்த வியாழக்கிழமை இரவு மனிதவுரிமை பற்றி பறைசாற்றும்  சர்வதேச சமூகத்துக்கு முன் சாத்வீக வழியில் போராடி தன்னை அர்பணித்த தியாகி திலீபன் அவர்களின் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு சிங்கள இராணுவமே பொறுப்புக் கூறவேண்டும். ஆகவே  இராணுவத்தின்  பிரசன்னத்தை வரவேற்கும் திரு.சம்பந்தன் அவர்கள் இவற்றுக்கு என்ன பதில் வைத்துள்ளார்?

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தமிழ் மக்களை பாதுகாக்கத் தவறிய அனைத்துலக சர்வதேச நாடுகள், தாம் விட்ட திட்டமிட்ட தவறில் இருந்து தம்மை தக்க வைப்பதற்காக கடந்த குறுகிய காலங்களாக சில சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் ஊடாகவும், விடுதலைப் போராட்டம் பலமாக இருந்த காலத்தில் தமிழர்களின் நண்பர்கள் என கூறிக்கொண்ட வேற்றின பிரமுகர்கள்  மற்றும் தற்பொழுது தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படும் திரு. சம்மந்தன் போன்றோர்கள் ஊடாக தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து அந்நியப்படுத்த முயல்வது  இங்கு தெளிவாக உணரக் கூடியதாக உள்ளது.

தமிழ்த் தேசியத்துக்கு தொடர்ந்து ஊறுவிளைவித்து வரும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கும் இதேவேளை மண்ணுக்காக மடிந்த மாவீர்களை மனதில் ஏந்தி நிலத்திலும் புலத்திலும் தமிழீழ லெட்சியத்துடன் உறுதியுடன் பயணிபோமாக .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!

நன்றி

ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி 



0 Responses to தமிழ்த் தேசியத்துக்கு தொடர்ந்து ஊறுவிளைவித்து வரும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வன்மையான கண்டனம்! - யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com