Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம்.ஜி.ஆர்., கருணாநிதியைப் போல் கர்நாடகத்திடம் பேசி ஜெயலலிதாவால் உரிய நீரை தமிழகத்துக்கு வாங்கித் தர இயலவில்லை என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மீது அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கருத்து தெரிவிக்கையில் :

காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் அரசியல் செய்கின்றன. முன்னர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி அகியோர் கர்நாடகத்திடம் பேசி தமிழகத்துக்கு தண்ணீர் வாங்கித் தந்தனர். ஆனால் அதுபோல் இப்போது வாக்கித் தர ஜெயலலிதாவால் முடியவில்லை. இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் அரசியல் நடத்துகின்றன. நதிகளை ராணுவத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

கூடங்குளம் விவகாரம், இலங்கைத் தமிழர் பிரச்னை, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் இரட்டை வேடம் போடுகின்றனர்.கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்பட்டும். மக்கள் பிரச்னைகளுக்கும் பொதுபிரச்னைகளுக்கும் தேமுதிக தனியாகவே எதிர்த்துப் போராடும். ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க தேமுதிக தனித்து நின்றே போராடும்.

இதுவரை என் மீது பத்து மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்.தொகுதிப் பிரச்னை குறித்து முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் எனக்கு அனுமதி தரவில்லை. என்னைக் கண்டு இந்த அரசு பயப்படுகிறதா?சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு நல்லதல்ல. வால்மார்ட்டால் இந்தியாவுக்கு எந்த நலனும் விளையப் போவதில்லை இவ்வாறு கூறினார் விஜயகாந்த்.

0 Responses to எம்.ஜி.ஆர், கருணாநிதியைப் போல் ஜெயலலிதாவால் கர்நாடத்திடம் பேசமுடியவில்லை: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com