யாழ் மாணவர்கள் மீதான படை அடக்குமுறையினை கண்டித்து பிரான்சில் பிரசித்தி பெற்ற நூல் நிலையம் ஜார்ஜ் போம்பிடோர் முன் கண்டன ஒன்று கூடல் இடம்பெற்றது.
கடும் குளிரிலும், மழையும் கொட்ட பல நூற்றுகணக்கான தமிழீழ மக்கள் கூடி தமிழீழத்தில் பல்கலை கழக மாணவர்களுக்கு எதிராக சிறிலங்கா ராணுவமும் தேசவிரோத குழுக்களும் கட்டவிழ்த்து விட்டுள்ள அரசியல் பயங்கரவாதத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சு மொழியில் பதாதைகளும், துண்டு பிரசுரங்களும், கோசங்களை தமிழீழ இளையோர் வழங்க சிறி லங்கா ராணுவத்தின் அட்டூழியத்தின் படங்களுடன் கூடி நிற்க கொட்டும் மழையிலும் கூட அந்த வழியில் சென்ற மக்களின் கவனத்தை திருப்பியது. பலர் அங்கு வந்து சிறி லங்காவில் நடைபெறும் நிகழ்வுகளை கேட்டறிந்து தமது ஆதரவையும் தெரிவித்தனர்.
சிறி லங்கா அரசின் அடக்கு முறை பல்கலைகழக மாணவர்களுடன் நிற்கவில்லைஇ நான்கு பேரை கைது செய்துஇ ஒருவரை விடுதலை செய்வது போல் முகம் காட்டி விட்டுஇ மீண்டும் ஒன்பது தமிழீழ மக்களை கைது செய்திருக்கிறது சிங்கள ராணுவம்இ அதில் இன்று தேசவிரோத ஆயுததாரிகளும் முன் நிற்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது அறிக்கையில்இ தமிழீழத்தில் நடைபெற்ற படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இயலாத்ததனமையாளால்இ ஒரு அரசுக்கு முன் தமது அதிகாரத்தை செலுத்த முடியாத காரணத்தால் நடைபெற்ற படுகொலையை தம்மால் தடுக்க முடியவில்லை. அப்படியான படுகொலைகள் மீண்டும் நடைபெற கூடாது என்று அறிக்கையில் எழுதி இருக்கும் வேலையில் இன்று சிறிலங்காவில் தமிழீழ பகுதியில் தமிழர்கள் சுதந்திரமாக தமது மண்ணுக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய மரியாதையை செலுத்த முடியாத நிலையில் சுதந்திரமற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களிடையே பல்கலைகழக மாணவர்கள் எடுத்திருக்கும் போராட்டத்தை வன்முறையால் தடை செய்திருக்கும் சிறிலங்கா அரசுக்கு இன்று இதே ஐக்கிய நாடுகள் சபை என்ன சொல்லப்போகிறது?
நாம் தமிழர்கள்இ வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக நாம் வாழும் நாடுகளில்இ எமது நாட்டில் உள்ள மக்களுடன் அவர்களுக்காக எடுத்து செல்ல வேண்டிய காலம் மிது.
அந்த அடிப்படையில் வரும் புதன்கிழமை மாலை 12-12-2012 முன்று முப்பதுக்கு (15ர்30) பிரெஞ்சு பாராளுமன்ற (யுளளநஅடிடéந யேவழையெடந ஆநவசழ 12) முன் மீண்டும் ஒன்று கூடி சிறி லங்கா அரசை சர்வதேசம் குற்ற நாடாக புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனமாக சர்வதேசத்தில் அங்கீகாரம் வழங்கி தமிழர்கள் பாதுகாக்கும் கடமையை இதே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் எடுக்கவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் முக்கிய ஐந்து நாடுகளாகி பிரான்சிடம் நீதி கேட்போம். சர்வதேச சட்டங்களை வலியுறுத்தஇ எமது மக்களின் படுகொலைக்கும் இன்று தொடர்ந்து நடைபெறும் கைதுகளை தடுத்து நிறுத்த குரல் கொடுப்போம்.
இன்று நாம் ஆரம்பித்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்று பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைஇ தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரான்சில் உள்ள சகல அமைப்புகளும் அழைப்பு விடுகிறது.
போராட்டம் தொடரட்டும்!
- பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு,
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
0 Responses to யாழ் மாணவர்கள் மீதான படை அடக்குமுறையினை கண்டித்து பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்!