Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார்.


இது குறித்து தெரியவருவதாவது:

சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ்.

படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ்.

அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது என்பதுதானாம்.

தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் அந்தநாட்டுக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதோடு நில்லாமல் இன்னொரு நிபந்தனையில், ஹிந்திப் படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துபூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ்.

இதுபோன்றதொரு நிபந்தனைகளை அந்தப் படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்றாலும் சத்யராஜ் நடிக்கவேண்டுமென்பதற்காக அவற்றை ஏற்றுக்கொண்டு நடிக்க வைத்திருக்கின்றனர்.

பணத்துக்காக எந்த வாயப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிற இந்நேரத்தில் தேடிவந்த வாய்ப்பு இல்லையென்றாலும் பராவயில்லை என்று தமிழனாக நின்ற சத்யராஜ், புரட்சித்தமிழன் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவராக மாறிவிட்டார்.

1 Response to தமிழினத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ்

  1. Unknown Says:
  2. GOOD JOB

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com