Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை இன்று மீண்டும் வருகிறது.

இப்போது உச்சநீதி மன்றத்தின் தீர்ர்ப்பை மதித்து, தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் நீர் திறந்து விடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாவே உள்ளது.

கர்நாடக அரசு உச்சநீதி மன்றம், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் நடுவர் மன்றம் என்று எந்த தீர்ப்பையும் இதுவரை  மதித்ததில்லை. கர்நாடகாவில் ஆளும் முதல்வர்கள் யாராயிருப்பினும் மக்களின் வாக்கு வங்கி ஒன்றையே கணக்கில் கொண்டு செயல் படுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உச்சநீதி மன்றத்தின் ஆணையையோ அல்லது காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையையோ ஏற்று, தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விட்டால் அங்கு விவசாய அமைப்புக்களும் விவசாய அமைப்புக்களுக்கு ஆதரவான அத்தனைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்படி போராட்டங்கள் வெடிக்கும் போது, ஆட்சிக்கு களங்கம் ஏற்படும். அடுத்து வரும் தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சி முதல்வருக்கு சுத்தமாக அரசியல் செல்வாக்கு அற்றுப் போகும். இதைக் கருத்தில் கொண்டே கர்நாடக அரசியல் தலைவர்களும் முதல்வர்களும் தமிழகத்துக்கு காவிரியில் நீர் தர மறுத்து வருவதாகவும், இன்று உச்சநீதி மன்றத்தில் தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடவேண்டும் என்று தீர்ப்பு வந்தால் அதையும் கர்நாடக அரசு புறக்கணிக்கும் என்பதும்  பல அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

0 Responses to கர்நாடகம் தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்துவிடுமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com