மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள்
அதிபர் நெல்சன் மண்டேலா நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வளாகம்
தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் அரசுரிமைக்காக போராடிய தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா சமீபத்தில் சுகயீனமுற்றதால் Pretoria எனும் இராணுவ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப் பட்ட சில மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர் நலமாக உள்ளார் எனவும் அவரது வயது காரணமாக வருகின்ற சாதாரண உடல் நலக் கோளாறே அவருக்கு ஏற்பட்டிருந்தது என மருத்துவமனை வளாகத்தில் இருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் 1994 ஆண்டு பதவிக்கு வந்து முதல் கறுப்பின ஜனாதிபதியாக கடமை புரிந்த நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை குறித்து அறிவதற்காக தென்னாபிரிக்காவின் தற்போதைய அதிபர் Jacob Zuma அவரை நேரில் சென்று வைத்தியசாலையில் நலம் விசாரித்தார்.
கடந்த ஜூலை 18 ஆம் திகதி தனது 94 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய நெல்சன் மண்டேலா, கடைசியாகப் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றது 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த உலகக் கால்பந்துப் போட்டியின் போதாகும். மேலும் இவர் கடந்த ஆண்டும் ஒரு முறை மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் அரசுரிமைக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசமும் அனுபவித்ததுடன் தியாகியாக உலகப் புகழும், சமாதானத்துக்கான நோபல் பரிசும் பெற்றவர் நெல்சன் மண்டேலா என்பது குறிப்பிடதக்கது.
எப்படியிருந்த போதும் உலகளாவிய ரீதியில் உன்னதத் தலைவராகக் கருதப் பட்டு வரும் நெல்சன் மன்டேலா பூரண நலத்துடன் இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும் என்பதே அவரின் ஆதவரவாளர்களின் பிரார்த்தனையாக இருக்கப் போகிறது என்பதை மறுக்க முடியாது.

0 Responses to மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மண்டேலாவின் உடல் நிலை தேறியுள்ளது: தென் ஆப்பிரிக்கா