Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீன தலைநகர் பீஜிங்கிற்கு ஐரோப்பிய மேற்குலக நாடுகளிலிருந்து விசா இல்லாமல் போய்வரக்கூடிய புதிய திட்டம் ஒன்றை சீன அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 2013ம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், சீன தலைநகர் பீஜிங்கில் மாத்திரம் 72 மணிநேரம் சுற்றுலா பயணிகள் தங்கிச்செல்லலாம்.  சுமார் 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் வேறு நாட்டு விசா வைத்திருந்தால் பீஜிங் வழியே வந்து செல்லலாம். சுமார் 72 மணிநேரம் பீஜிங்கில் தங்கலாம். பீஜிங்கை சுற்றிப்பார்க்கலாம்.  ஆனால் பீஜிங்கை விட்டு வேறு எந்த நகரத்துக்கும் செல்ல கூடாது. 72 மணி நேரத்திற்குள் பீஜிங்கை விட்டு வெளியேறிவிட வேண்டும். பீஜிங்கிற்கான சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் பொருட்டு இச்சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் 2013ம் ஆண்டு சுமார் 6 இலட்சம் முதல் 8 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் பீஜிங்கிற்கு வருவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

எனினும் இப்புதிய திட்டத்தின் கீழ் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியன்மார், இலங்கை ஆகிய நாட்டினருக்கு விசா இல்லாமல் பீஜிங்கில் உள்நுழைய முடியாது.

0 Responses to பீஜிங்கிற்கு இனி விசா இல்லாது சென்றுவர சிறப்பு அனுமதி அளிக்கிறது சீனா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com