Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

FDI அமலாக்கத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

பதிந்தவர்: தம்பியன் 08 December 2012

சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை ஏற்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் மத்திய அரசு வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு கொண்டுவரப்படவுள்ளதற்கு அமெரிக்கா தனது வரவேற்பை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்தி தொடர்பாளர் மார்க் டோனார் தெரிவிக்கையில்,

இந்திய பாராளுமன்றத்தின் முடிவை நாம் வரவேற்கிறோம். இந்திய அதிகாரிகள் சுட்டியுள்ளதன் படி அன்னிய முதலீடு சிறுதொழிலுக்கும், விவசாயிகளுக்கும் அதிக முதலீட்டுக்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

பொருட்களின் விலை குறைவதுடன், வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனை தரும். சீனா மற்றும் பிரேசில் போன்ற வளரும் நாடுகளை போன்று இந்தியாவிலும் சந்தைகளை பெருக்கும்.  இந்திய சில்லறை வணிகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் பல முதலீடு செய்ய காத்திருக்கின்றன. அதிகப்படியான முதலீட்டை பயன்படுத்துவதுடன், தேவையற்ற சேமிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவீனங்களை குறைத்து விவசாயிகளை சந்தைகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த இதன் மூலம் வாய்ப்பு உருவாகும். வாடிக்கையாளர்கள் பொருட்களை தரமாகவும், அதே நேரம் விருப்பமான முறையிலும் தெரிவு செய்ய இது வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிச்சயமக நன்மை பயக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மை கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் உள்ள நவீன தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அனுபவத்தின் சிறப்புக்களை பயன்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

அன்னிய நேரடி முதலீடு, சில்லறை வணிகத்தில் புதிய தொழில்நுட்பத்தையும், முடஹ்லீட்டையும், வேளாண் பொருட்களுக்கான சந்தைப்படுத்தலில் புதிய யுக்திகளையும் வழங்கும் என கூறிஅனர்.

0 Responses to FDI அமலாக்கத்திற்கு அமெரிக்கா வரவேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com