Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Pi's Lullaby  எனும் இப்பாடலை இது வரை கேட்கத்தவறியிருப்பின் இப்பதிவு உங்களுக்கானது.
இது தமிழ் இசையமைப்பாளர் ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல. கனேடிய இசையமைப்பாளர் மைக்கேல் டனா (Mychael Danna) வின் இசையில் வெளிவந்த Life of Pi யின் 28 டிராக் பாடல் தொகுப்பில் முதலாவதாக வருகிறது இப்பாடல்.

பாடல் வரிகளும், இசையும் மைக்கேல் டானா & பாம்பே ஜெயசிறீ இருவரின் முயற்சியிலும் உருவானவை. பாடியவர் பாம்பே ஜெயசிறீ. ஏ.ஆர்.ரஹ்மானை தவிர்த்து, தமிழ் இசையமைப்பாளர்கள், குறிப்பாக உங்களுக்கு தெரிந்த தென்னிந்திய இசையமைப்பாளர்கள் இன்னமும் போகவேண்டிய தூரம் எவ்வளவு என்பதை இப்பாடலை கேட்ட பின்னர் உணர்ந்து கொள்வீர்கள்.

இசையமைப்பாளர் Mychael Danna வை பற்றி சில வரிகள் :

டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். தீபா மேதாவின் Water, மீரா நாயரின் Moonsoon Wedding பார்த்திருந்தீர்கள் எனில் இவரது இசை உங்களுக்கு சட்டென ஞாபகத்திற்கு வரும். 



0 Responses to 'காற்றில் மிதக்க வைக்கும் ஓர் அந்நியரின் தமிழ் பாடல்': காணொளி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com