Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையினர் மீண்டும் அழைத்து வந்தனர்.

இவ்வாறு வரும் போது, கழிவறை மற்றும் கப்பல் கண்ணாடிகளை சுத்தம் செய்ய வைத்ததாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் கடந்த 2ம் திகதி மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். பின்னர் திருகோணமலையில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 40 மீனவர்களும் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய பின்னர் இவ்வாறு தமது அனுபவங்களை கூறியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும் தம்மை அரை நிர்வாணம் ஆக்கி தாக்குதல் நடத்தியதாகவும், நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது சங்கிலியால் கட்டி இழுத்து சென்றதாகவும் கூறியுள்ள அவர்கள், இந்திய கடலோர காவல் படையினர் கூட தம்மை மரியாதையாக அழைத்து வரவில்லை. அவர்களது கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்தார்கள். அதோடு மண்டபமம் முகாமுக்கு வரும் வரை உணவேதும் வழங்கவில்லை. கோடிக்கரையிலேயே எமது படகுகளை விடுவித்திருந்தால் நள்ளிரவே வந்திருப்போம். ஆனால், மறு நாள் காலை 7.00 மணிக்கே எம்மை விடுவித்தனர். அவர்கள் எம்மை அலைக்கழிப்பதில் குறியாக இருந்தனர் என கூறியுள்ளனர்.

0 Responses to இந்திய கடற்படை கப்பல்களின் கழிவறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்ட மீனவர்கள்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com