Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இங்கிலாந்து  - இந்திய அணிகளுக்கு இடையில் நாக்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
சற்று முன்னர் வரை 106 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்ற போது போட்டியை டிக்ளே செய்தது.

இந்திய அணியின் சார்பில் கோலி 103 ஓட்டங்களையும், தோனி 99 ஓட்டங்களையும் பெற்றனர்.  பந்து வீச்சில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்வான் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கேப்டன் அலெஸ்டீர் கூக்கை இழந்தது. அஷ்வினின் பந்துவீச்சில் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோம்ப்டனின் விக்கெட்டை ஓஜாவும், பீட்டர்சனின் விக்கெட்டை ஜடேஜாயாவும் வீழ்த்தினர்.

நாளையே கடைசி நாள் ஆட்டம் என்பதால் இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடும் முனைப்பில் உள்ளன.

டில்ஷான் சதமடித்த போதும், ஆஸ்திரேலியா முன்னிலை

ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில்,  ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 450 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. இதையடுத்து இலங்கை பதிலுக்கு களமிறங்கி 336 ஓட்டங்கள் பெற்றிருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. டில்ஷான் மிக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 147 ஓட்டங்களை பெற்றார். விக்கெட் கீப்பர் ஜெயவர்த்தன 40 ஓட்டங்களையும் மத்திவ்ஸ் 75 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிடில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை பெற்றிருந்தது. இதான் மூலம் ஆஸ்திரேலிய அணி இலங்க்கையை விட்ட 141 ரன்கள் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

0 Responses to இரண்டாவது இன்னிங்ஸ்: போராடும் இங்கிலாந்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com