எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதம் 2013 இல் ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நீதியை வேண்டி
நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு இம்முறை ஐ.நா களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு
முக்கிய காலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இப்போர்க்குற்ற விசாரணைகளையும் தாண்டி
தமிழர்களுடைய வேண்டுகோளென்பது நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக
அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட
அறிக்கையின் அடிப்படையில்,
இலங்கையில் நடந்த போரில் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பதையும் அதனால் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் ஐநா தெரிவித்திருக்கும் இவ்வேளை ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய ஈழத்தமிழ் மக்கள் சுயமாக தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அளிக்கவேண்டுமென்று ஜெனீவாவிலுள்ள முக்கிய தமிழ் பிரமுகர்களின் கருத்துக்களுடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து மாபெரும் தமிழர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்குபற்றும் பிரமுகர்கள் ஈழத்தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பார்கள்.
2013ம் ஆண்டு 1ம், 2ம், 3ம், நாள்களில் ஜெனீவாவில் இடம்பெறும் மாநாடானது தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பிற்கு குரல் கொடுக்கும் முக்கிய பன்னாட்டு பிரமுகர்களை ஒருங்கிணைப்பதுடன் ஐ.நா பொதுச்சபையில் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பினைக் கொண்டு வருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாக அமையும்.
இப்பாரிய வேலைத்திட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து கொண்டு செயற்பட வேண்டுமென கனடிய தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Responses to சர்வஜன வாக்கெடுப்பு: ஜெனிவா நோக்கியும் அதனைத் தாண்டியும்!