Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் சவுந்தரராஜன்.  அவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் புனிதா ( வயது 13).  நாசரேத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.  சவுந்தரராஜன் ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.  எனவே, மகள்களுடன் உள்ளூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார் இசக்கியம்மாள்.

தாத்தா வீட்டில் இருந்து ரயில் மூலம் பள்ளிக்கு சென்று வந்தாள் புனிதா.  கிளாக்குளத்தில் இருந்து தாதன் குளத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.  இந்த வழி காட்டுப்பாதை.  அதனால் மாணவிகள் குழுவாக சேர்ந்துதான் ரயில் நிலையத்திற்கு செல்வார்கள்.

அரையாண்டு தேர்வு நடந்து வருவதால்நேற்று முன் தினம் காலை 7 மணி அளவில் புனிதா தனியாக புறப்பட்டு சென்றாள்.   காட்டுப்பாதையில் ரயில் நிலையத்தை நோக்கி சென்றாள்.


மாலையில் அவள் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கூடத்தில் விசாரித்த போது அவள் அங்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
 

இந்நிலையில் நேற்று காலையில் கிளாக்குளம் - தாதன் குளம் இடையே காட்டுப்பகுதியில் சீருடையில் மாணவி பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.  உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  ஆடைகள் கலைந்த நிலையில் மாணவியின் பிணம் கிடந்தது. அருகே அவளது புத்தகப்பை, குடிநீர் பாட்டில், செருப்பு ஆகியவை கிடந்தன.   விசாரணையில் அது தேடப்பட்ட புனிதா என்பது தெரியவந்தது.
மூக்கு,வாய் வழியே ரத்தம் வழிந்து உறைந்து இருந்தது.  ரயில் நிலையத்திற்கு சென்ற அவளை வழிமறித்து தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும், பின்னர் துப்பட்டாவினால் அவளது கழுத்தை நெரித்து  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பதும் தெரியவந்தது.
 
தப்பியோடிய மர்ம மனிதர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  பள்ளிக்கூடத்திற்கு சென்ற சிறுமியை கடத்தி கொன்ற கொடூரம் குறித்து அறிந்ததும் கிளாக்குளம் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.  நெல்லை -திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சமாதானம் செய்து மறியலை கைவிட வைத்தனர்.   தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிப்பதால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


0 Responses to தூத்துக்குடியில் பயங்கரம் : பள்ளி மாணவி புனிதா கற்பழித்து கொடூரக்கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com