Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியக் கூட்டமைப்பு குழுவின் மாநாட்டின் போது, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

இன்று நடந்த தேசிய கூட்டமைப்புக் குழுவின் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயலுக்கு மத்தியின் முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இவ்வேளையில், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி இது பற்றிக் கூறுகையில், "பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரி நேரம்தான் ஒதுக்கப் பட்டது.

ஒருநாள் குழுக் கூட்டத்தில், மதிய உணவுக்கான நேரம் போனால், மீதம் உள்ளது கொஞ்ச நேரம்தான். இதில் 35 மாநில முதல்வர்கள் பேச 10 நிமிடங்களும், பிரதமர் உரையாற்ற 20 நிமிடங்களும், நிதி அமைச்சர். வேளாண்துறை அமைச்சர் 20 நிமிடமும் என்று உரையாற்ற வேண்டும். இதை ஜெயலலிதா புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அனைத்து மாநில அமைச்சர்களும் நிரம்பிய கூட்டத்தில் வெளிநடப்பு செய்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

பாஜக முதல்வர்கள் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேச 10 நிமிடம் போதவே போதாது. அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டிவிட்டு, பேச நேரம் தரவில்லை என்றால் எப்படி? இல்லாவிட்டால் இரண்டு நாள் கூட்டமாக மத்திய அரசு நடத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்: மத்திய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com