Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்களைக் குறிவைத்து நடத்தும் இனவாதப் பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உடன் நிறுத்தவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நேற்றுத் தெரிவித்தார். தமிழ்  முஸ்லிம் கூட்டணி நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்த நாட்டில் தமிழ்  முஸ்லிம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இனவாதம் பேசும் குழுவொன்று மீண்டும் தோன்றியுள்ளது.கொழும்பில் தமிழ்  முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று தெரிவித்தே இந்த இனவாதச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.சிறுபான்மையினர் கொழும்பில் வாழ்ந்துவருவது இப்போது ஏற்பட்ட நிலைமை அல்ல. சுதந்திரத்துக்கு முன்பிருந்து  அவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.

கிழக்கில் 3 வீதமாக இருந்த சிங்கள மக்கள் 30 வீதமாக அதிகரித்துள்ளனர். இது எப்படிச் சõத்தியமானது? நிலைமை இப்படி இருக்கும்போது கொழும்பில் சிறுபான்மையினர் அதிகரித்துவிட்டனர் என்று கூறுவது இனவாதமே.எந்த இன மக்களும் நாட்டின் எந்த இடத்திலும் வாழும் நிலைமை உருவாக்கப்படவேண்டும். வீண் பிரசõரம் செ´து நல்லிணக்கத்தைக் குழப்பக்கூடாது.

கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இனவாத பரப்புரை இனவாதச் செயற்பாடுகள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய நிறுத்தவேண்டும்.போரின் பின்னர் இந்த நாட்டில் மூவின மக்களிடையேயும் குழப்புவதை நிறுத்தி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றார்.

0 Responses to இனவாதப் பரப்புரைகளை கோத்தா நிறுத்த வேண்டும்; மனோ கணேசன் வலியுறுத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com