Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் எம் எல் ஏக்களில் 74% வீதம் பேர், அதாவது 134 எம் எல் ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பாஜக எம்.எல்.ஏக்களில் மீண்டும் தேர்வானவர்களிள் 65 பேர். கடந்த 5 ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு 177%  அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு ரூபாய் 5 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. குஜராத் எம்பிக்களிலும் பாதி பேர் கோடீஸ்வரர்கள் என்றே ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

அண்மைய சட்டமன்ற தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 110 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. முதல்வராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். குஜராத் மாநில சட்ட சபையின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இதன் போது புதிய எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to குஜராத் எம்.எல்.ஏக்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com