ஜனவரி 15 ஆம் திகதி கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு
உலையில் மின் உற்பத்தித் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி
தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி, "கூடங்குளம் அணு உலைக் குழாய்களில் இறுதிக் கட்ட ஆய்வின் போது கண்டறியப்பட்ட கசிவுகள், ரஷ்ய மற்றும் இந்திய தொழில் நுட்ப வல்லுனர்களால் சீர் செய்யப்பட்டுவிட்டது. இனி அடுத்த கட்டமாக மின் உற்பத்தி தொடங்கும் வேலைதான் பாக்கி உள்ளது.
எனவே வரும் 15 ஆம் திகதி முதல் கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உறபத்தித் தொடங்கிவிடும். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளோம். இது தொடர்பாக மேலும் பிரதமரை வலியுறுத்தி வருவோம்." என்றும் கூறியுள்ளார்.

0 Responses to வருகிற 15 ஆம் திகதி கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்? : மீண்டும் நாராயணசாமி