Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2014 ல் நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்று மதிமுகவின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதற்கும், தூத்துக்குடியில் புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கும் காரணம் மதுதான். இந்த மதுவை ஒழிக்கத்தான் மதிமுக கடுமையாகப் பாடுபடுகிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பெண்கள் இடையே  அங்களது  மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவு பெருத்து வருகிறது. பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமுல்படுத்தும் வரை மதிமுக ஓயப்போவதில்லை என கூறியதோடு,  நடக்க விருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றும்  கூறியுள்ளார்.

எனினும் கட்சி கூட்டணி பற்றி அவர் வாய் திறக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பாராளுமன்றத் தேர்தலில் மதிமுக போட்டியிடும்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com