ஊடக சுதந்திரம் தொடர்பில் உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஆய்வில் இலங்கை 163 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
2011-2012ம் ஆண்டுகளை அடிப்படியாக வைத்து, ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு மேற்கொண்ட இத்தரவரிசையில் 179 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தபப்ட்டுள்ளன. அதில் உலகில் சிறப்பான ஊடக சுத்ந்திரம் நிலவும் நாடாக பின்லாந்தும் அதை தொடர்ந்து நோர்வே, எஸ்தோனியா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன.
உலகில் மிக மோசமான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக எரித்திரியா விளங்குகிறது. இலங்கை 163 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முன்னைய ஆய்வுகளின் போது 2010ம் ஆண்டு இலங்கை 158 வது இடத்தையும், 2009 இல் 162 வது இடத்தையும், 2002 இல் 51 வது இடத்தையும் பிடித்திருந்தது. எனினும் கடந்த 2011-12 ஆண்டுகளில் இலங்கையில் மிக மோசமான முறையில் ஊடக சுதந்திரம் மீறப்பட்டிருந்ததாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா இம்முறை இப்பட்டியலில் 131 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷ் எதியோப்பியா, கென்யா போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளன.

0 Responses to ஊடக சுதந்திரம் தொடர்பிலான உலக நாடுகள் பட்டியல்: இலங்கைக்கு 163 வது இடம்