மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரை, தேனீ , விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டத்தை சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர், மதுரை மல்லியை புவிசார் குறியீடுக்கு விண்ணப்பித்து இருந்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு உத்தியோகபூர்வமாக கிடைத்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது, அந்த மண்ணுக்கு மட்டுமே கொடுக்கப்படும் தர அந்தஸ்து. ஒரு குறிப்பிட்ட புவிசாஅர்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும் படி பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னத்தை இவ்வாறு அழைப்பர். அதன் படி, நல்ல வாசனையும், காம்பு நீண்டும் காணப்படும் மதுரை மல்லிக்கு இந்த புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மதுரை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும், இச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதனால் மல்லியில் கலப்படம் செய்து வியாபாரம் செய்ய வியாபாரிகள் நினைக்க கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மதுரைக்கு வழங்கப்பட்டுள்ள புவிசார் குறியீடு மதுரை, தேனீ, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லிகளுக்கு மட்டும் சொந்தம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது: விவசாயிகள் மகிழ்ச்சி