Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் சிக்காக்கோ விமானநிலையமான ஓ'ஹாரே இல் ஒரு பொதியில் 18 மனித்தலைகள் சில நாட்களுக்கு முன் வந்திருந்தன என தெரிவிக்கப்படுகிறது
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று இன்று புதன்கிழமை தெரிவிக்கப் பட்டுள்ளது.. ஆனால் பின்னர் இத்தலைகள் யாவும் சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் உடற்கூறியல் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குக் கொண்டு வரப்பட்டவை என ஊடகங்களால் அறிவிக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்மஸ்ற்கு முதல் நாளே ரோமில் இருந்து வந்து சேர்ந்த இத்தலைகள் முறையாகப் பதிவு செய்த ஆவணங்கள் காட்டப் படாமையால் இவ்வளவு நாளும் கேட்பாரற்றுக் கிடப்பில் போடப்பட்டு இருந்துள்ளதாக சிக்காக்கோ விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் சிக்காக்கோ சன் டைம்ஸ் எனும் பத்திரிகைக்கு மேரி பலேயோலொகோஸ் இலுள்ள கூக் கன்ட்ரி மெடிக்கல் ஆய்வு அலுவலகம் பேட்டியளிக்கையில் இத்தலைகள் தற்போது கூக் பகுதியிலுள்ள சவச்சாலையில் சேமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தோல் நீக்கப் படாத இந்த முழு மனிதத் தலைகள் கடைசியாக சிக்காக்கோ விமான நிலையத்தில் திங்கட்கிழமை கண்டெடுக்கப் பட்டன. இதேவேளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் பிரியான் பெல் சன் டைம்ஸுக்குப் பேட்டியளிக்கையில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மருத்துவ பரிசோதனைக்காக எந்த ஒரு உடல் பாகத்தையும் கொண்டு செல்வதற்குத் தடையில்லை எனக் கூறியுள்ளார்.

0 Responses to ரோமில் இருந்து கடத்தப்பட்ட 18 மனிதத் தலைகள் : சிக்காக்கோ விமானநிலையத்தில் பரபரப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com