Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜம்மு காஷ்மீர் மாநில பூஞ்ச் நகரான இந்திய எல்லைக்குள் சக்திவாய்ந்த கன்னி வெடிகள் புதைக்கப் பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உதவியுடன், பாக்  தீவிர வாதிகள் புதைக்கப் பட்ட கன்னி வெடிகள் இவை என்றும் சந்தேகிக்கப் படுகிறது.

புதைக்கப் பட்டு இருந்த கன்னி வெடிகள் பாகிஸ்தானில் செய்யப் பட்டவை என்று தெரிய வருவதால், இந்திய ராணுவத்தை மோசமான நிலைக்குத் தள்ள, பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உதவியுடன், தீவிரவாதிகள் செய்த சதி செயலா இது என்கிற கோணத்தில் விசாரணைத் துரிதப் படுத்தப் பட உள்ளது.

இதற்கிடையில் பாஜகவின் துணைத் தலைவர் முக்தர் அபாஸ் ரபிக், பாகிஸ்தான் எப்போதும் போல உண்மையை மறைக்கிறது. இந்திய ராணுவ வீரர்களால் பாக் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டார்கள் என்பதும், எல்லை தாண்டி சென்றார்கள் என்பதும் பொய்யான தகவல்களே. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானுடன் போதனையில் ஈடுபடுவதை விடுத்து, தன் தவறை பாகிஸ்தான் உணரும் வகையில் அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ இயக்குனர், இந்திய ராணுவ இயக்குனரை தொடர்பு கொண்டு, பாக் ராணுவ வீரர்கள் இனி போர் ஒப்பந்தத்தை மீறமாட்டார்கள் என்று உறுதி அளித்ததாகவும் தெரிய வருகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்து கிராம மக்கள், எல்லையில் நிலவி வரும் பதற்றம் காரணமாக இடம்பெயரத் திட்டமிட்டுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அச்சப் படுகிறார்கள் என்றும் கிராம மக்கள் கூறிவருகின்றனர்.

இதனால் பெற்றோர்கள் நிம்மதியின்றி வாழ்வதாகவும் தங்களது குழந்தைகளின் நலன் கருதி வேறு ஊருக்கு சென்று விடலாமா என்று யோசிப்பதாகவும் கூறுகிறனர். அதோடு இந்திய ராணுவ வீரர்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றாலும் தங்களுக்கு அச்சம் போகவில்லை என்றும் கூறுகின்றனர்.

0 Responses to இந்திய எல்லைக்குள் சக்தி வாய்ந்த கன்னி வெடிகள் கண்டுபிடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com