Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலிக்கு அண்மையில் உள்ள நாடான மௌரிடானியாவில் இன்று வியாழக்கிழமை அல்ஜீரிய விமானப்படை குண்டுத் தாக்குதல் நடத்தியதில் அங்கு அல்கொய்தா இயக்கத்தினருடன் தொடர்புடைய குழுவால் பணயக் கைதிகளாகத் தடுத்து வைக்கப் பட்டிருந்த 34 பொது மக்களும் இவர்களைக் கடத்திய அல்கொய்தாவுடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 14 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இக்குண்டுத் தாக்குதலால் பாலைவனப் பகுதியில் இக்கடத்தல்காரர்களால் கைப்பற்றப் பட்டிருந்த எரிபொருள் சேமிப்பகமும் சேதமடைந்துள்ளது என மௌரிடானியாவின் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை அல்கொய்தாவுடன் தொடர்புடையவர்கள் இன்னும் எண்ணிக்கை தெரியாத பல பேரை மௌரிடானியாவில் கடத்தி வைத்துள்ளனர் எனவும் இவர்களுடன் தொடர்பைப் பேண மூடியவில்லை எனவும் மேற்கத்தேய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உள்ளூர் ஊடகமான ANI கருத்துத் தெரிவிக்கையில் இராணுவம் இக் கடத்தல்காரர்களை நெருங்கினால் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் எஞ்சிய கைதிகளையும் கொலை செய்து விடுவோம் என அவர்கள் தமக்கு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இன்னொரு புறத்தில் இந்நாட்டிற்கு அண்மையில் உள்ள மாலியில் அல்கொய்தாவினருடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைகளை அடக்குவதற்காக தற்போது அங்கு பிரான்ஸின் விமானப் படைகள் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அல்ஜீரியா விமான தாக்குதல் - 34 பணயக் கைதிகள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com