Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேலூரில் கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட கட்டையாக கிடந்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பாக்கம் பொலிசார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது குறித்த பெண் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி கலா(வயது 37) என்பது தெரியவந்தது.

கட்டிடத் தொழிலாளியான கலாவுக்கு சக தொழிலாளியான அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(வயது 42) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் காவேரிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது கலாவின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால், சந்தேகம் அடைந்த ராஜா கண்டித்துள்ளார்.
இருப்பினும் கலாவின் போக்கு மாறவில்லை.

இதற்கிடையே 18-5-2008 அன்று ராஜாவும், கலாவும் காவேரிப்பாக்கத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜா கலாவை அடித்து காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கோபால் என்பவரின் நிலத்தில் அவரை எரித்துக் கொன்றார்.

கொலை நடந்து 5 ஆண்டுகள் கழித்து ராஜா தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொண்டபுரம் கிராம நிர்வாக அதிகாரி வேணுகோபாலிடம் சரண் அடைந்தார்.

அவர் இது குறித்து காவேரிப்பாக்கம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to கள்ளக்காதலியை எரித்து கொன்றவர் 5 ஆண்டுகளுக்கு பின் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com