Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது மகளை கொலை செய்த சவூதி அரேபிய அரசாங்கத்தினதோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த நபர்களினதோ எந்த உதவிகளும் தமக்கு தேவையில்லை என்று சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறான எந்த உதவிகளையும் தான் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள ரிசானாவின் தாயார், சவூதி அரேபியாவைச் சேர்ந்த பலர் தனக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவ்வாறான அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் எவரும் வரவேண்டாம் என்றும் அவர் கண்டிப்பாக குறிப்பிட்டுள்ளார்

ரிசானாவின் குடும்பத்துக்கு அமைச்சர் ஹக்கீம் நிதியுதவி
 
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்துக்கு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் ஐந்து இலட்ச ரூபாவை வழங்கியுள்ளார்.

இதேவேளை சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று இலட்ச ரூபாவை ரிசானாவின் குடும்பத்துக்கு நேரடியாக சென்று கையளித்துள்ளார்.

0 Responses to சவுதி அரேபிய நாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ள போவதில்லை!- ரிசானாவின் தாயார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com