செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் 9 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று 25வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிறப்பு முகாமில் இருந்து மாற்ற வேண்டும் என்றும், தங்களை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கும் என அகதிகள் உறுதியாக தெரிவித்தனர்.
அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருந்ததால் பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
உண்ணா நிலையில் இருந்த செங்கல்பட்டு சிறப்பு முகாம் தமிழர்கள் கைது. புழல் சிறையில் அடைப்பு.
கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் , தங்கள் குடும்பத்தோடு வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர்.
மொத்தம் 23 ஈழத் தமிழர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் உடல் நிலை மோசமடையவே அனைவரையும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் காவல் துறையினர் . இருப்பினும் மருத்துவமனையில் அவர்கள் தங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் ஈழத் தமிழர்களுள் 14 பேர்கள் அவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அப்போது அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது . ஆனால் உடன்பாடு ஏற்படாமல் அப்பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
அதை தொடர்ந்து மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் மீதம் உள்ள 9 ஈழத் தமிழர்கள் தொடர்ந்து உண்ணா நிலையில் இருந்தனர். அரசு தங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி நல்லதொரு தீர்வை தரும் என நம்பினர். ஆனால் இறுதிவரை அரசு எந்த தீர்வையும் முன்வைக்க வில்லை.
அதனால் வெறுப்பின் உச்ச நிலையை அடைந்த ஈழத் தமிழர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையையும் நேற்று முதல் புறக்கணித்தனர். சிகிச்சை புறக்கணிக்கப்பட்ட பின் அவர்கள் உடல் நிலை மேலும் மோசமாகியது.
இந்த நிலையில் காவல் துறை இவர்கள் மேல் தற்கொலைக்கு முயன்றதாக பொய் வழக்கு போட்டு அனைவரையும் கைது செய்து உள்ளது. இப்போது 9 ஈழத் தமிழர்களும் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். எனினும் போராட்டக் காரர்கள் புழல் சிறையிலும் தங்கள் உண்ணா நிலைப் போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.
முகாமில் வாடும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல கட்சிகள் மற்றும் இயக்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது!