Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அயர்லாந்தில் விற்கப்பட்ட பர்கரில் குதிரைக் கறி வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் உணவான “பர்கர்” சர்வதேச புகழ் பெற்றது.

இந்நிலையில் சமீப காலமாக பர்கரின் சுவையில் ஏதோ மாற்றம் தென்படுவதாக அயர்லாந்து நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் குவியத் தொடங்கின.

இதனையடுத்து அயர்லாந்து நாட்டின் பிரபல பர்கர் தயாரிப்பு நிறுவனம், லண்டனில் உள்ள டெஸ்கோ ஆகிய இடங்களில் விற்பனையான பர்கரை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையின் முடிவில், பர்கர் உணவில் குதிரைக்கறி வைக்கப்பட்டிருந்தது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதற்காக குறித்த நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.

இதுகுறித்து அயர்லாந்து விவசாயத் துறை அமைச்சர் சைமன் கோவேனி கூறுகையில், இதை ஒரு போதும் ஏற்க முடியாது. தவறு எங்கு நடந்துள்ளது என்பது குறித்து ஆராயப்படும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்க அனுமதிக்க முடியாது என்றார்.

மேலும் அயர்லாந்து நாட்டு வாடிக்கையாளர் ஒருவர் கருத்து கூறுகையில், குதிரை இறைச்சி உண்பது எங்கள் நாட்டின் கலாச்சாரத்தில் கேட்டறியாத ஒன்று. மாட்டிறைச்சி என்ற பெயரில் குதிரை இறைச்சியை கலப்படம் செய்து விற்ற நிறுவனங்களின் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 Responses to இங்கிலாந்தில் விற்கப்பட்ட பர்கரில் குதிரை இறைச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com