Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எகிப்திய கிளர்ச்சியின் போது, மக்கள் போராட்டத்தை நேரடி தொலைக்காட்சி செய்திகள் மூலம் முபாரக் பார்த்து வந்ததாகவும், அவருக்கு தெரியாமல் அவரது படைகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும முபாரக்குடன் நெருங்கிப்பழகியிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

எகிப்தியப் புரட்சியில் சுமார் 900 பேரின் படுகொலைக்கு காரணமாக இருந்ததால்,  தனது பதவியில் இருந்து வெளியேற்றப் பட்ட எகிப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற்போது ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசமிருந்து வருகிறார்.  எனினும் பொதுமக்கள் போராட்டத்தின் போது தனது அரச படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை எனவும் தனது உதவியாளர்கள் தனக்கு இதனை மறைத்துவிட்டதாகவும் நீதிமன்ற விசாரணைகளின் போது அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற 18 நாட்களாக அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஹோஸ்னி முபாரக் தனது மாளிகையிலிருந்து  சாட்டெலைட் தொலைக்காட்சி மூலம் அவதானித்து வந்ததாக மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் அஹ்மெட் ரக்ஹெப்பும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

84 வயதான ஹோஸ்னி முபாரக் ஆயுள் தண்டனை பெற்றுள்ள போதும் இது குறித்து மறுவிசாரணை மேற்கொள்ளப் படும் வாய்ப்பு தோன்றியுள்ளது. இந்நிலையிலேயே இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 Responses to எகிப்து கிளர்ச்சியில் இடம்பெற்ற வன்முறைகளை தொலைக்காட்சியில் பார்த்தார் முபாரக்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com