Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெங்களூருவில உள்ள கர்நாடக முதல்வரின்  அலுவலக இல்லத்துக்கு குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியுள்ளது கர்நாடக  குடிநீர் வாரியம்.

மேலும் ரூபாய் 11 லட்சம் வரை குடிநீர் கட்டணத்தொகை பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சாதாரண குடிமக்கள் குடிநீர் கட்டணம், அல்லது மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அதிகாரிகள் அவர்கள் வீட்டுக்கு படை எடுக்கத் தொடங்கி விடுகின்றனர். அல்லது இணைப்புக்களை துண்டித்து விடுகின்றனர். ஆனால் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டர் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூபாய் 11 லட்சம் வரை குடிநீர் கட்டணத் தொகை செலுத்தவில்லை என்று கர்நாடக குடிநீர் வாரியம் தகவல் அளித்துள்ளது.

முதல்வரில் அலுவலக இல்லத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் 7 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய். இது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான  குடிநீர் கட்டணம். ஆனால் இது கர்நாடக முதல்வருக்குத் தெரியவில்லை. இந்த தொகை 3 லட்சம் வட்டியுடன் சேர்ந்து தற்போது 11 லட்சம் ரூபாயாகி விட்டது.

இந்த உண்மையை முதல்வர் ஷட்டரின் அலுவலக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவே  குடிநீர் வடிகால் வாரியத்தினர்  பயந்து தயக்கம் காட்டி வருகின்றனர் என்கிற தகவல் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி  வருவதால், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கர்நாடக குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

0 Responses to குடிநீர் கட்டணம் செலுத்தாத கர்நாடக முதல்வர் : ரூபாய் 11 லட்சம் பாக்கி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com