Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


அமெரிக்காவில் உள்ள கன்னெக்டிகுட் மாநில சிறுவர் பள்ளியின் குழந்தைகள் மீதான துப்பாக்கிச் சூடு சமீபத்தில் நிகழ்ந்த கொடூரமான சம்பவமாகும்.
இதனையடுத்து அமெரிக்காவில் பரவாலாக நிகழும் துப்பாக்கிக் கொள்வனவையும் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கலாம் என்ற நிலமையையும் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜனவரி இறுதிக்குள் புதிய சட்டத்தைக் கொண்டு வர முயன்று வருகின்றார்.

இந்நிலையில் சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை வியத்தகு முறையில் அதிகரித்து வருகின்றது. டிசம்பரில் மட்டும் துப்பாக்கி உட்பட ஆயுதங்களைக் வாங்குவதற்காக தேசிய உடனடி காசோலைத் திட்டம் எனப்படும் NICS முறையில் 2 783 765 காசோலைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான FBI தெரிவித்துள்ளது.

இந்த அனைத்து காசோலைகளும் ஒரு துப்பாக்கியை அல்லாது பல ஆயுதங்களை வாங்குவதற்கான ஒரு பிண்ணனியை  குறிப்பது கவனிக்கத்தக்கது. நவம்பரில் மட்டும் 2,006 919 காசோலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 முழு வருடமும் 19.6 மில்லியன் backround காசோலைகள் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் இது 2011 ஐ விட 19 % வீத அதிகரிப்பு என்பதுடன் 1998 தொடக்கம் ஒவ்வொரு வருடமும் கொள்வனவு செய்யப் பட்ட ஆயுதங்களில் மிக அதிகளவு கொள்வனவு செய்யப் பட்ட வருடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த NICS திட்டம் 1998 இல் இருந்து அமுல் படுத்தப் பட்டுள்ளது. இதுவரை 160 474 702 பின்னணி காசோலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் வெறும் 0.006 % வீதம் அதாவது ஒரு வருடத்தில் 100 இற்கும் குறைவான ஆயுதக் கொள்வனவுக்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப் பட்டுள்ளன. தற்போது கலிபோர்னியாவில் மட்டும் மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்களிடம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. 10 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் மிக உறுதியான ஆயுதக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் இம்மாநிலத்திலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவில் தம்மைத் தற்பாதுகாத்துக் கொள்வதற்காக என்றே பல மக்கள் ஆயுதங்களை வாங்க முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளதால் இப்பிரச்சினை இன்னும் சிக்கலாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சாண்டி ஹூக் சிறுவர் பள்ளி துப்பாக்கிச்சூட்டு சம்பவமும் ஒரு காரணமாகியுள்ளது.

0 Responses to துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கிகள்! - அமெரிக்க ஆயுதக் கொள்வனவு சட்டத்தில் குழப்பம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com