Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதி அரேபியாவில் ரிசானா நபீக் துன்புறுத்தப்பட்டு,  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டின் நெசர்கீ, இலங்கை இளம் யுவதியான நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பொது செயலாளர் பான் கீ மூன் கலக்கமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

ரிசானா நபீக் மீதான வழக்கின் விசாரணைகள் மற்றும் தடுத்து வைப்பு தொடர்பில் வெளியான தகவல்கள் குறித்தும், அவர் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைய ஆண்களுக்கும், பெண்களுக்கும் தமது வழக்கில் உள்ள உரிமைகளை சவுதி அரேபியா முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ரிசானா நபீக் மீதான வழக்கு விசாரணைக்கு ஒரு சட்டத்தரணியேனும் சமூகமளித்திருக்காமை குறித்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ருபர்ட் கொல்விலே தெரிவித்துள்ளார்.

ரிசானா நபீக் கூறிய விடயங்களில் மொழி பெயர்ப்பு செய்ததிலும் சிக்கல் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ரிசானா நபீக் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பலவந்தமாக ஆவனங்களில் கைச்சாத்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு

சர்வதேச சட்டம் மீறப்பட்டது

ரிசானா நபீக்கை மரண தண்டனைக்கு உட்படுத்தியதன் மூலம், சவுதி அரேபியாவின் அதிகாரிகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின், சட்ட முறையற்ற கொலைகள் மற்றும் சட்ட முரண் செயற்பாடுகள் குறித்த ஆராய்சியாளர் கிறிஸ்டொப் ஹெயின்ஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரிசானா நபீக் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்ட போது, அவருக்கு 17 வயதுகள் மட்டுமே  என்பது குறிப்பிடத்துக்கது.

இதற்கிடையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளுமாறு, சவுதி அரேபியாவின் அதிகாரிகள் ரிசானா நபீக்கை அடித்து துன்புறுத்தியதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்ட விரோதமான முறையில் தங்கியுள்ளவர், அந்த நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்திற்குள் நாடு திரும்ப, டுபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் உதவி வழங்கவுள்ளது.

சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிய 27 நாட்களுக்கான பொது மன்னிப்பு அடுத்த மாதம் முதல்வாரத்துடன் நிறைவடைகிறது.

இந்த காலத்துக்குள் தங்களிடம் வரும் இலங்கையர்களுக்கு வீசா மற்றும் பயண அனுமதிபத்திரங்களை வழங்கவிருப்பதாக, டுபாயில் உள்ள துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

0 Responses to ரிசானா துன்புறுத்தப்பட்டார்!- ஐ.நா.சபை கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com