டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, மத்திய அரசுடனான பகுஜன் சமாஜ் கட்சியின் போக்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், ஆதரவு தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான அரசு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவந்து, பிற்படுத்தப் பட்டோர், மற்றும் சிறுபான்மையினரையும் அதில் சேர்ப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தன்னை ஏதோ பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் போல சித்தரித்துப் பேசுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள மாயாவதி, தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியியில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
தலித்துக்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் அரசு அக்கறை காண்பிப்பதில்லை என்றும், அவர்கள் உடனடியாக நீதிமன்றங்களை நாடி தங்களுக்கு உரிய நீதியைப் பெறவேண்டும் என்று தாம் அறிவுறுத்துவதாகவும் கூறியுள்ளார் மாயாவதி.
0 Responses to தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை: மாயாவதி