Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கல்லணை கட்டிய சோழ மன்னன் கரிகால சோழனுக்கும் விரைவில் மணிமண்டபம் கட்டப் படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் பொறியாளர் நினைவைப் போற்றும் வகையிலும் அவரை கௌரவிக்கும் வகையிலும் தேனீ  மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பென்னிகுக் நினைவு மணி மண்டபத்தைத் திறந்து வைத்து பேசிய ஜெயலலிதா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை விட, கல்லணை 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், அணை இன்னமும்  மிக வலுவுடன் உள்ளது என்றும் , காவிரி நீர் பாசன மக்களுக்கு மிகவும் பயன் தந்து கொண்டிருக்கிறது என்றும் கல்லணை பற்றிக் கூறிய ஜெயலலிதா, கரிகால சோழனை நினைவு கூறும் வகையிலும், கௌரவிக்கும் வகையிலும், கல்லணையில் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்துக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளதைப் பற்றிப் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்திஜ்ன் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாகவே அமையும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

0 Responses to கல்லணை கட்டிய கரிகால சோழனுக்கும் விரைவில் மணிமண்டபம்: ஜெயலலிதா அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com