ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இனால் 2003 ஜூனில் செவ்வாய்க்
கிரகத்தின் ஒழுக்கில் சுற்றி வரும் விதத்தில் செலுத்தப்பட்ட செய்மதியான
மார்ஸ் எக்ஸ்பிரெஸ் (Mars Express) சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்தின் தரை
மேற்பரப்பைப் படம் பிடித்து அனுப்பியது.
இதில் மிகப் பரந்த மற்றும் நீளமும் ஆழமும் உள்ள நதிப் படுக்கை ஒன்றின் மிகக் கவர்ச்சியான புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த வற்றிய நதிப் படுக்கைக்கு ரூயெல் வாலிஸ் எனப் பெயரிட்டுள்ள ESA இந்நதிக்கு மேலும் பல கிளைகள் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்நதியில் 3.5 - 1.8 மில்லியன் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் பாய்ந்திருக்கலாம் எனவும் கணிப்பிட்டுள்ளது.
செவ்வாயின் சம தரையில் சுமார் 1500 Km நீளத்துக்குப் பாய்ந்த அடையாளம் உள்ள இந்த நதிப் படுக்கையின் சில இடங்களில் 6-10 Km வரையிலான அகலமும் காணப்படுகின்றது. மேலும் இதன் அதிகபட்ச ஆழமாக 100-600 இடையிலான மீட்டர் காணப்படுகின்றது. பூமியில் உள்ள மிகப் பெரிய நதியான அமேசன் 6500 Km நீளமும் அதிகபட்ச அகலமாக சில இடங்களில் 11 Km வரை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது சந்திரனைப் போன்ற சில குழிகளும் சில இடங்களில் மேடுகள், மலைகள், பள்ளத்தாக்கு மற்றும் எரிமலைகளும் பல இடங்களில் மிகப் பெரிய பாலவனமும் அவற்றின் இடையே நதிப் படுக்கைகளுமாக செவ்வாயின் தரை மேற்பரப்பு காணப்படுகின்றது. இவற்றைப் பார்க்கும் போது செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீரும் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழ்நிலையும் நிலவியிருக்கலாம் என்ற ஊகம் பல விஞ்ஞானிகளுக்குத் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர் வாழ்க்கை நிலவக் கூடிய சூழ்நிலை தற்போதும் இருக்கலாம் என ஐயப்படுவதற்கு உதாரணமாக பற்றீரியா போன்ற நுண்ணுயிரிகள் அங்கு வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. இதற்கான காரணம் செவ்வாயில் சில இடங்களில் இன்னமும் உயிர்ப்புள்ள எரிமலைகள் காணப்படுவதாகும்.
பொதுப்படையாகக் கூறினால் வருங்காலத்தில் மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் காலடி வைப்பதற்கோ அல்லது குடியேறுவதற்குரிய சூழ்நிலை அமைவதோ முடியுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0 Responses to செவ்வாய்க் கிரகத்தில் ஓடிய நதி?: புகைப்படங்கள்