இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி இலகு வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய பந்துவீச்சில், ஜடேயா 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின், இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி 28.1 பந்தில், 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. விராத் கோலி 77 ஓட்டங்களையும் கௌதம் கம்பீர் 33 ஓட்டங்களையும் எடுத்தனர். போட்டி நாயகனாக விராத் கோலி தெரிவானார்.
இன்றைய போட்டி மகேந்திர சிங் தோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டி இதுவாகும். தோனி போட்டி முடிவடையும் தருணத்தில் களமிறங்கி இரு பவுன்றி அடித்தார். அவர் மைதானத்திற்குள் நுழைந்ததும் ரசிகர்களின் கரகோஷம் காதை பிளந்தது. பரிசளிப்பு விழாவின் போது, மைதானத்திற்குள் நுழைந்ததும் பதற்றமடைந்தீர்களா என அறிவிப்பாளர் கேள்வி எழுப்பினார். நான் இங்கு ஏற்கனவே அதிகமான போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அதனால் பதற்றமிருக்கவில்லை என்றார் தோனி.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜன.23ம் திகதி மொஹாலியில் நடைபெறுகிறது.

0 Responses to விராத் கோலி அதிரடி: இந்தியா இலகு வெற்றி