Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக்கழகத்தை தொடக்க முயற்சி

பதிந்தவர்: தம்பியன் 02 January 2013

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மூதவையே இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்யும் வரையில் தாங்கள் விரிவுரைகளுக்குச் செல்லப் போவதில்லை என மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனைத் தாங்கள் ஒரு போராட்டமாகச் செய்யவில்லை என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்வதற்குத் தாங்கள் பிரயோகிக்கக் கூடிய அழுத்தங்களுக்கு வேறு மார்க்கம் ஏதும் இல்லாத நிலையிலேயே இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளை சுமுகமான ஒரு சூழலில் ஆரம்பிப்பதற்கான முயற்சியில் பல்கலைககழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணத்திலிருந்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

யாழ. பல்கலைக்கழகத்தின் பொதுப் பிரச்சினைகளில், நிலைமைகளை ஆராய்ந்து தெளிந்து, இறுதித் தீர்மானத்தை எடுக்கவல்லது என்பதால், நரன்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள பிரச்சினையில் பல்கலைக்கழகத்தில் உள்ள வெவ்வேறு கல்வித்துறைகளையும் சார்ந்த மாணவர்கள், பீடாதிபதிகள் துறை ரதியாகத் தனித்தனயாகக் கூடி நிலைமைகளை ஆராய்ந்து தமது முடிவுகளை துணைவேந்தருக்குத் தெரிவிக்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

திங்களன்று கலைப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களும், பீடாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கூடி ஆராய்ந்தபோது, யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், வெளியிடங்களிலிருந்தும் மாணவர்கள் வரவேண்டியிருக்கின்றது. ஆயினும் மழை, வெள்ளம் காரணமாக பல இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதனால் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அத்துடன், பல இடங்களில் வீதிகள் துண்டிக்கப்பட்டு,பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துக்கள் இன்னும் சீரடையாத காரணத்தினால் வெளியிடங்களைச் சேர்ந்த மாணவர்கள் உடனடியாகப் பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவது இயலாத காரயம் என்பது குறித்து திங்களன்று இடம்பெற்ற பகப்பீடத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து பொங்கலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

இதேவேளை, இன்று விஞ்ஞான பீடத்தினர் கூடி நிலைமைகளை ஆராயந்திருக்கின்றார்கள். தொடர்ந்து அடுத்தடுத்து வெவ்வேறு பீடங்களைச் சேர்ந்தவர்களும் கூடி நிலைமைகளை ஆராய்ந்து துணைவேந்தருக்கு அறிவிப்பதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மூதவை கூடி, நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து இறுதி முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Responses to யாழ் பல்கலைக்கழகத்தை தொடக்க முயற்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com