Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் திடீரென இராணுவ கவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வருடப்பிறப்பாகையால் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் திடீரென ஆலயச் சூழலில் இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆலய சூழலில் இவ்வாறு திடீர் படையினரின் காவலரண்  அமைக்கப்பட்டமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்புக்காகவே இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸாரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் திடீரென காவலரண் அமைக்கப்பட்டு இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலத்துக்கு தொடர்ந்தும் நிலைகொள்ளும் வகையிலேயே இந்தக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாவெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

0 Responses to நல்லூர் ஆலய முன்றலில் புதிதாக காவலரண் அமைத்து காவலில் இருக்கும் இராணுவத்தினர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com