Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை இன்று (01.01.2013) காலை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது, 

இந்திய மக்கள் அனைவரும் நலமோடு வாழ எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னுடைய துறை சார்பாக மதுரை மற்றும் தமிழ்நாட்டுக்கு செய்துள்ளேன். அந்த திட்டங்களை நிறைவேற்றாமல் இந்த அரசு அதை செயல்படுத்தாமல் இருப்பதற்குத்தான் செயல்படுகிறது. 

தமிழகம் தற்போது இருண்டு கிடக்கிறது. இருண்ட ஆட்சிதான் நடக்கிறது. ஓராண்டுக்குள் மின்சாரம் வரும் என்று வழக்கம்போல சொல்லி வருகிறார் முதல்வர். மத்திய அரசு தமிழக அரசின் வளர்ச்சி உதவவில்லை என்று ஜெயலலிதா கூறியதாக கேட்கிறீர்கள். திமுக ஆட்சியில் மத்திய அரசு என்ன உதவிகள் செய்ததோ, அதேபோலதான் இந்த அரசுக்கும் மத்திய அரசு செய்கிறது. ஆனால் ஜெயலலிதா அரசு இதனை அரசியல் சாயம் பூசி மறைக்கிறது. 

கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்போம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: அது அவர்களது கட்சி விருப்பம். 

கேள்வி: பிரதமராக ஜெயலலிதா முயற்சி செய்வதாக தெரிகிறதே?
பதில்: அது அவர்களுடைய விருப்பம். விஜயகாந்த் கூட முதல்வர் ஆக வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இந்த அரசு போட்ட 4 வழக்குகளை கூட அவரால் தாங்க முடியவில்லை. அன்னா ஹசாரே ஆசைப்பட்டார் ஆக முடியவில்லை. என்னைக் கூட தான் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டனர். மக்கள் மனது வைத்தால்தான் எல்லாம் நடக்கும்.

கேள்வி: உங்களது பிறந்தநாள் சுவர் விளம்பரம் அழிப்பட்டதே?
பதில்: திட்டமிட்ட அராஜக வேலை. ஜெயலலிதா பிப்ரவரி மாதம் கொண்டாட வேண்டிய பிறந்த நாள் சுவர் விளம்பரம் இருக்கிறது. ஜனவரியில் கொண்டாடக்கூடிய என்னுடைய விளம்பரங்களை அதிமுகவினர் அழித்துள்ளனர். அந்த விளம்பரங்களை அவர்களே அழிக்க வேண்டும். இல்லையென்றால் திமுகவினரே போய் அழிப்பார்கள் என்றார்.

0 Responses to பிரதமராக ஜெயலலிதா முயற்சி செய்வதாக தெரிகிறதே? மு.க.அழகிரி பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com