Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமாதான முனைப்புக்களின் ஐந்து விடயங்கள் சிங்கள கடும்போக்காளர்களை அதிருப்தி அடையச் செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. நோர்வே தூதுவர் நாடு கடத்தப்பட வேண்டும். 

2. அண்மையில் ஐரோப்பாவில் திரையிடப்பட்ட தமிழர் ஆதரவு திரைப்படம், 


3. பி.பி.சீ கருத்துக் கணிப்பில் தமிழ்த் தேசியப் பாடலுக்கு கௌரவமளிக்கப்பட்டமை, 


4. தேசிய கீதம்,


5. தேசிய கொடி 


போன்ற விடயங்கள் தொடர்பில் சிங்கள கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தியதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

சிங்களக் கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் சமாதான முனைப்புக்களுக்கு எதிராக செயற்பட்ட போதிலும், அது பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளே இவ்வாறு கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அஸ்லி வில்ஸ் மற்றும் பிரதித் தூதுவர் லிவிஸ் அம்லீம் ஆகியோரே இந்த குறிப்பினை அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்களக் கடும் போக்குடைய கட்சிகளின் அழுத்தங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது சமாதான முனைப்புக்களில் பாதக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 Responses to சிங்கள கடும்போக்காளர்களை அதிருப்தி அடையச் செய்த ஐந்து விடயங்கள்! விக்கிலீக்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com