டெல்லியில்
ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் போலீசார் நடத்திய
விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன. இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர்
வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து
இருப்பது தெரியவந்துள்ளது.
மாணவியும்
அவரது நண்பரும் கடந்த 16-ந்தேதி இரவு பஸ்சில் ஏறியதும் அந்த மைனர் வாலிபர்
முதலில் கிண்டல் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவியின்
நண்பருக்கும் 6 பேர் கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது
டிரைவர் ராம்சிங் கம்பியை எடுத்து மாணவியின் நண்பரை சரமாரியாக
தாக்கியுள்ளார். அதை தடுத்த மாணவியையும் இரக்கமின்றி தாக்கியுள்ளார்.
இதையடுத்து மாணவி அந்த வாலிபர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
ராம்சிங்குக்கு இதை கேட்டதும் ஆத்திரம் அதிகரித்துள்ளது. உனக்கு பாடம் கற்பிக்கிறேன் பார் என்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளான்.
அவனது
வெறிச்செயல் அடங்கியதும் 17 வயது மைனர் வாலிபர் மாணவியை கற்பழித்துள்ளான்.
அதற்கு பிறகு அக்ஷய் என்பவன் மாணவியை வேட்டையாடி உள்ளான். ஓடும் பஸ்சில்
சுமார் 30 நிமிடம் அந்த மிருகங்களிடம் சிக்கி மாணவி போராடினார். 3
வாலிபர்களும் ஒன்று சேர்ந்து செய்த கொடூரத்தின் உச்சமாக மாணவி மயங்கி
விழுந்தார்.
மாணவி
மயங்கி விழுந்த பிறகு ராம்சிங்கும் அக்ஷயும் நகர்ந்துவிட்டனர். ஆனால் அந்த
17 வயது வாலிபர் மட்டும் மீண்டும் கொடூரத்தில் ஈடுபட்டான். மயங்கி கிடந்த
மாணவியை பலாத்காரம் செய்தான். அவனால்தான் மாணவி ஆழ்ந்த மயக்க நிலைக்கு
செல்ல நேரிட்டது.
இதுமட்டுமின்றி மாணவியை வயிற்றில் தாக்கியதும் இவன்தான். மாணவி சிறுகுடல் காயம் அடைந்ததற்கு இவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இவ்வளவு
அட்டூழியத்தையும் செய்துவிட்டு அவன் மைனர் என்ற போர்வையில் தப்ப
நினைக்கிறான். அவனை தப்ப விடக்கூடாது என்பதற்காகத்தான் அவன் உண்மையான வயதை
கண்டுபிடிக்க போலீசார் அவனுக்கு எலும்பு சோதனை நடத்தி உள்ளனர்.
அந்த சோதனை அறிக்கை இன்று வர உள்ளது. அதன் பிறகே சிறுவன் பற்றி டெல்லி போலீசார் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.
0 Responses to டெல்லி மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்