Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர், வீட்டு எஜமானின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் வீசப்பட்ட நிலையில் பொலிஸாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கொழும்பு, புளூமென்டல் வீதியைச் சேர்ந்த அங்கஸ் பெரேரா (வயது 30) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவராவார்.

தாக்குதலுக்குள்ளான இப்பெண் காயமடைந்த நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஒரு வருடத்திற்கு முன்னர் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இந்நிலையில், அப்பெண் பணிப்பெண்ணாக சேர்ந்த வீட்டு எஜமானால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுகின்றன. அத்துடன், தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சவூதியில் எஜமானின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் வீசப்பட்ட இலங்கைப் பணிப்பெண்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com