Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹாக்கி பாலியல் சில்மிஷம் குற்றச்சாட்டில் ஜம்மு காஷ்மீர் மாநில ஹாக்கி பயிற்சியாளர் ஹைதராபாத்தில் இன்று கைதாகியுள்ளார்.

ரயிலில் ஹாக்கி விளையாட்டு வீராங்கனைகளுடன் பயணித்த போது, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில 20 வயதுக்குட்பட்ட மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தவர் அங்காட் சிங். டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயிலில் வந்த போது, பெண் ஹாக்கி வீராங்கனைகளிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக, 5 பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இன்று அங்காட் சிங் கைது செய்யப் பட்டுள்ளார்.

இந்த ஹாக்கி பயிற்சியாளரின் விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரைக் கைது செய்த ஹைதராபாத் போலீசார் ஹைதராபாத் ஹாக்கி சங்கத்திலும் விவரம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹைதராபாத் கூடுதல் ஐ ஜி தேஜ்தீப் கவுர் மேனன், அங்காட் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறியுள்ளார். இவர் ஹைதராபாத் ஹாக்கி சங்கத்தின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாலியல் சில்மிஷப் புகாரில் ஜம்மு காஷ்மீர் மாநில ஹாக்கி பயிற்சியாளர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com