இந்தியாவில் பாலியல்
வன்கொடுமைகள் அதிகரிக்க பீகார் மாநிலத்தவர்களே காரணம் என்று மகாராஷ்டிரா
நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் அவரது கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
அனைவரும்
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர். அத்தகைய
செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து யாருமே கேள்வி
எழுப்புவதில்லை. பீகார் மாநிலத்தவர்கள் பற்றி கருத்துக்களை வெளியிட்டதற்காக
என் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமைகளில்
ஈடுபடுபவர்களில் பெரும்பாண்மையானோர் பீகார் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்
என்ற உண்மையை மட்டும் யாரும் பேச மறுக்கின்றனர் என்றார்.
0 Responses to பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்க பீகார் மாநிலத்தவர்களே காரணம்! ராஜ்தாக்கரே குற்றச்சாட்டு!