Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த ஜெரின் மிர்(வயது 20) என்ற பெண் இரயிலில் அடிபட்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில் கற்பதற்காக அங்கு சென்று வசித்து வந்த மேற்படி பெண், இரண்டாம் வருடம் கற்றுக் கொண்டிருக்கும் போதே தனது ஆண் துணை நண்பரை அங்கு தெரிவு செய்ததாகவும், தன்னுடன் படிக்கும் ஒரு நண்பி மூலமாக அறிமுகமான மேற்படி ஆண் நண்பர் லண்டனில் கல்வி கற்றபின்னர் பங்களாதேசில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும் இந்த இருவரும் தங்களது உறவை கடந்த செப்டம்பரில் முகப்புத்தகம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரும் இவரது ஆண் நண்பரும் இரயில் பாதையருகே நடந்து சென்றபோது இரயிலால் மோதுண்டு மேற்படி பெண் இறந்ததாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன. எனினும் மேற்படி பெண்ணின் குடும்பத்தினர் இது கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

மேற்படி பெண்ணின் ஆண் துணைவர் நீதிமன்றக் காவலில் மூன்று நாட்களிற்கு எடுக்கப்பட்டு இது குறித்த விசாரணைகள் தொடர்ந்துவரும் அதேவேளை இந்தப் பெண்ணின் மரணத்தில் கனடிய அதிகாரிகள் தலையிட்டு விசாரிக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலையில் மாத்திரம் பலத்த காயமடைந்த இப்பெண் வைத்தியசாலையில் மரணமானார்.

இப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களின் தகவல்களின்படி அவர் மெதுவாக சென்றுகொண்டிருந்த ஒரு பலசரக்கு ரயிலில் தலையை மோத வைத்தே மரணமடைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

0 Responses to இரயில் அடிபட்டு இறந்த கனடா பெண்ணின் மரணத்தில் சந்தேகம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com